UPDATED : ஆக 03, 2026 06:33 PM
ADDED : ஆக 03, 2026 06:02 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பேட்டை சாலையில் முருகன் என்பவருக்கு சொந்தமான மர அறுவை மில் உள்ளது.
அதன் அருகே மர குடோனும் செயல்படுகிறது. இந்நிலையில் மர அறுவை கூடத்தில் அதிகாலை 3:00 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அவ்வழியே சென்றவர்கள் திண்டுக்கல் தீயணைப்பு மீட்பு படைக்கு தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் பொன்னம்பலம் தலைமையில் 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த மீட்பு படையினர் மர அறுவைக்கூடம் முழுவதும் பரவி இருந்த தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் கோடிக்கணக்கான மதிப்பு தேக்கு மரங்கள், அறுவை இயந்திரம், பொருட்கள் எரிந்து நாசமானது. தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
