ADDED : மே 21, 2026 04:44 AM

அ நிறம் | அளவு
நத்தம்: நத்தம் அருகே வத்திபட்டியை சேர்ந்தவர் செல்வம் 48. அப்பகுதியில் எலக்ட்ரிக் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
நேற்று காலை கடையை திறக்க சென்ற போது மின்சார வயரில் கசிவு ஏற்பட்டு தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது. தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். கடையில் இருந்த மின்விசிறிகள், மின்சாதன பொருட்கள் தீயில் எரிந்தன. நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.
