ADDED : செப் 23, 2026 09:21 PM
அ நிறம் | அளவு
நெய்க்காரபட்டி, செப்.24-
பழநி நெய்க்காரப்பட்டி அருகே வாடிப்பட்டியில் சின்னமுத்துவுக்கு சொந்தமான கரும்பு ஆலை உள்ளது. இந்த ஆலை பல மாதங்களாக செயல்பாட்டில் இல்லாத நிலையில் நேற்று திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்த பழநி தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். ஆனாலும் ஆலை முற்றிலும் தீயில் கருகியது. பழநி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
