ADDED : ஜன 20, 2026 07:10 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் நின்ற அரசு பஸ்சில் தீ பிடித்ததால் பயணிகள் அலறியடித்து ஓடினர்.
தேனி மாவட்டம் குமுளியில் இருந்து திருப்பூருக்கு புறப்பட்ட அரசு பஸ் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டிற்கு மதியம் 3:30 மணிக்கு 50 பயணிகளுடன் வந்தது. பஸ்சை வத்தலக்குண்டுவை சேர்ந்த குமார் ஓட்டினார்.
நடைமேடையில் நின்றிருந்த பஸ்சின் முன்பகுதியில் திடீரென கரும்புகை கிளம்பி தீ பிடித்தது.
பஸ்சில் இருந்த அனைவரும் அலறியடித்து கீழே இறங்கினர்.
பஸ்சில் இருந்த தீயணைப்பான் கருவியை பயன்படுத்தி பேட்டரி பகுதியில் இருந்து கிளம்பிய தீ அணைக்கப்பட்டது.
போக்குவரத்து பணியாளர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் அனைவரும் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
