ADDED : ஜூலை 07, 2026 04:45 AM

திண்டுக்கல்: மாவட்ட தீயணைப்பு, மீட்புப்பணிகள் துறை சார்பில் தீத்தடுப்பு, பாதுகாப்பு விழிப்புணர்வு செயல் விளக்க பயிற்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. கலெக்டர் துர்கா தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சாந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெயந்தி முன்னிலை வகித்தனர்.
உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் மயில்ராஜ் தலைமையில் தீத்தடுப்பு குழு நிலைய அலுவலர்கள் விவேகானந்தன், ஜெயமாரி ஐயப்பன் (பயிற்சி) உட்பட தீயணைப்புத்துறை வீரர்கள் செயல் விளக்கம் அளித்தனர்.
அப்போது தீத்தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகள், கட்டடங்களில் தீப்பிடித்தால் பாதுகாப்பாக தப்பிப்பது, தீயணைப்பான் பயன்பாடு, பேரிடர் கால முன் எச்சரிக்கை பணிகள், காஸ் சிலிண்டர் விபத்தில் இருந்து தப்பிக்கும் வழிமுறைகள் குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். அரசு ஊழியர்கள், பொதுமக்கள் பயனடைந்தனர்.
