தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 'கொடை'யில் துாண்டில் மீன் போட்டி

 'கொடை'யில் துாண்டில் மீன் போட்டி

 'கொடை'யில் துாண்டில் மீன் போட்டி


ADDED : மே 27, 2026 08:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 27, 2026 08:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொடைக்கானல்: கொடைக்கானலில் நடக்கும் கோடை விழாவில் மீன் வளத்துறை சார்பில் தூண்டில் மீன் பிடிக்கும் போட்டி ஏரியில் நடந்தது.

மலர் கண்காட்சியுடன் கூடிய கோடை விழாவை யொட்டி மீன் பிடித்தல் போட்டி நடந்தது.இதில் 14 பேர் பங்கேற்றனர். கொடைக்கானலை சேர்ந்த செல்வம் 2.4 கிலோ எடை மீனை பிடித்து முதல் பரிசை பெற்றார். 2 கிலோ மீன்பிடித்த அருமைநாயம் 2ம் பரிசு , 500 கிராம் மீன் பிடித்த விமல் 3ம் பரிசு பெற்றனர். சுற்றுலா அலுவலர் கோவிந்தராஜ் பரிசு வழங்கினார். தோட்டக்கலை துணை இயக்குனர் சந்திர கவிதா, மீன்வளத்துறை உதவி இயக்குனர் கொழிஞ்சிநாதன் கலந்து கொண்டனர்.

வழக்கமாக 5 கிலோ எடை மீன்கள் போட்டியே இதுவரை இடம் பெற்றுள்ளன. ஏரியில் பாசி படர்ந்தும், புற்கள் நீருக்கடியில் வளர்ந்துள்ளதால் மீன் பெருக்கமின்றி குறைந்த எடையுள்ள மீன்கள் கிடைத்துள்ளன.

மீன் வளத்துறை ஏரியில் ஆண்டுதோறும் புல் வெட்டி கெண்டை மீன் குஞ்சுகள் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் மீன்கள் விடப்பட்டு வந்தன. மீன்வளத்துறையின் மெத்தனப்போக்கான செயல்படால் ஏரியில் மீன் உற்பத்தி குறைந்து ஏரி மாசடைய காரணமாக உள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

'கோடை'யில் சாரல் குளுகுளு நகரான கொடைக்கானலில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் வழக்கத்திற்கு மாறாக வீடுகளில் மின்விசிறி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது. நேற்று மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட அரை மணி நேரம் சாரல் மழை பெய்தது. கொடைக்கானல் வருகை தந்த பயணிகள் இதமான சீதோஷ்ண நிலையால் மகிழ்ச்சி அடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us