ADDED : அக் 03, 2024 06:09 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் பழநி ரோடு பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சிலர் சுற்றித்திரிவதாக மேற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது திண்டுக்கல் முத்தழகுபட்டியை சேர்ந்த ராஜேஸ்19,மணப்பாறையை சேர்ந்த தேவ அமலின் விஜய்20,பெரிய அய்யங்குளத்தை சேர்ந்த 17 வயது சிறார் உட்பட மூவரும் போலீசில் சிக்கினர். கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர். முத்தழகுபட்டி ஒற்றை பனைமரம் பகுதியில் கத்தியுடன் சுற்றிய தாடிக்கொம்பு பாண்டியன்24,முத்தழகுபட்டி சந்தியராஜ்30,குமரன் திருநகரை சேர்ந்த 17 வயது சிறுவன் உட்பட மூவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.
