/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நிரம்புது வரதமாநதி அணை; வெள்ள அபாய எச்சரிக்கை
/
நிரம்புது வரதமாநதி அணை; வெள்ள அபாய எச்சரிக்கை
ADDED : அக் 22, 2025 07:22 AM
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி பகுதியில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வரும் நிலையில் வரதமாநதி அணை நிரம்பி வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பழநி அணைகளின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை காரணமாக அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று மதியம் 12:00 மணிக்கு பாலாறு பொருந்தலாறு அணை ( 65 அடி) 34.65 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து வினாடிக்கு 560 கன அடி உள்ள நிலையில் வினாடிக்கு 10 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. வரதமாநதி அணையில் ( 66.47 ) 66 அடியாக உயர்ந்து நீர் வரத்து வினாடிக்கு 152 கன அடி, வெளியேற்றம் 5 கன அடியாக உள்ளது. குதிரையாறு அணையில் நீர் ( 80 அடி) 50.12 அடி , நீர் வரத்து 75 கன அடி, வெளியேற்றம் 5 கன அடியாகவும் உள்ளது.
வரமாநதி அணை 66 அடியாக உயர்ந்ததை தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் வரமாநதி அணையில் இருந்து வெளியேறும் நீர் செல்லும் வரட்டாறு, பாலாறு, சண்முகநதி கரையோர பகுதிகளில் உள்ள பழநி, ஆயக்குடி பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.