ADDED : ஏப் 14, 2026 08:08 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்;நாட்டின் முன்னாள் பிரதமர் மொரார்ஜிதேசாய் 31ம் ஆண்டு நினைவு தினம், திண்டுக்கல் தெற்கு ரதவீதி பஜனை மடம் அருகில் உள்ள கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் மன்றம் சார்பில் அனுஷ்டிக்கப்பட்டது.
ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தில் உயிர்நீத்த இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீயாகச் சீலர்களுக்கு மவுன அஞ்சலி , முன்னாள் பிரதமர் மொராஜிதேசாய் திருவுருவப் படத்திற்கு மலர் துாவி மலரஞ்சலி செலுத்தினர். மன்றத்தின் பொறுப்பாளர் சரவணன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் பழனியப்பன்மாறன் முன்னிலை வகித்தார். கிழக்கு மாவட்ட பொருளாளர் இராமனாதன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் நவரத்தினப்பாண்டி, மாநகர் சிவாஜி மன்ற இளைஞர் பிரிவுத் தலைவர் நாகரத்தினப்பாண்டி நன்றி கூறினார்.
