/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதான திட்டம் தொடக்கம்
/
பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதான திட்டம் தொடக்கம்
பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதான திட்டம் தொடக்கம்
பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதான திட்டம் தொடக்கம்
ADDED : பிப் 06, 2025 05:52 AM
ஒட்டன்சத்திரம்; பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் 2023ல் பழநி தேவஸ்தானம் சார்பில் ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் தொடங்கப்பட்டது.
2 ஆண்டுகளாக தினமும் பத்தாயிரம் பக்தர்கள் வீதம் 10 நாட்களுக்கு ஒரு லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் வீதம் 10 நாட்களுக்கு 2 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
அன்னதான மண்டபத்தில் சுவாமிக்கு சிறப்பு பூஜையில் செய்யப்பட்டது.
அறங்காவலர் குழு தலைவர் கே.எம். சுப்பிரமணியன், அறங்காவலர்கள் எஸ். பாலசுப்ரமணியம், எஸ். அன்னபூரணி, ஜி.ஆர். பாலசுப்பிரமணியன், கே.தனசேகர் அன்னதானத்தை தொடங்கி வைத்தனர்.
பழநி தண்டாயுதபாணி கோயில் இணை ஆணையர் எஸ்.மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர் லட்சுமி, நகராட்சி தலைவர் கே.திருமலைசாமி, எவர்கிரீன் சிட்டி கிளப் நிர்வாகி சரவணன், தி.மு.க., முன்னாள் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சிவக்குமார், ஜவுளி வர்த்தகர் சங்க செயலாளர் செல்வகணேஷ் பங்கேற்றனர்.

