/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கால்பந்து போட்டி: திண்டுக்கல் அணி வெற்றி
/
கால்பந்து போட்டி: திண்டுக்கல் அணி வெற்றி
ADDED : டிச 29, 2025 06:00 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் கால்பந்து அணிகளுக்கு இடையேயான லீக் போட்டிகள் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்தது.
முதல் டிவிசன் ரத்தினம், ராஜேஷ்குமார் நினைவு கோப்பைக்கான போட்டியில் சச்சின் சாக்கர் அணியும், புனித ஜோசப் மில்ஸ் எப்.சி., அணியும் மோதின. இதில் 4:2 என்ற கோல்கணக்கில் சச்சின் சாக்கர் அணி வெற்றிபெற்றது.
விஷ்ணு, கனிமுத்து, சதீஷ்குமார் கோல் அடித்தனர். இரண்டாவது டிவிசன் கீதா டிம்பர்ஸ், ரத்தினபாண்டியன் நினைவு கோப்பைக்கான போட்டியில் திண்டுக்கல் எப்.சி., சன் ஸ்போர்ட்ஸ் கிளப் எப்.சி., அணிகள் மோதின. இதில் 1:0 என்ற கோல்கணக்கில் திண்டுக்கல் அணி வெற்றி பெற்றது. பார்த்திவ் கோல் அடித்தார்.

