ADDED : ஏப் 03, 2026 06:24 AM

அ நிறம் | அளவு
தாண்டிக்குடி: - கன்னிவாடி வனச்சரத்திற்குட்பட்ட ஆத்துார் நீர்தேக்கத்தை யொட்டிய வனப்பகுதியில் சில தினங்களாக காட்டு தீ பற்றி எரிந்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை சரிவர பெய்யாது நிலையில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் வெளுத்து வாங்கி வருகிறது.
இங்குள்ள வனப்பகுதியில் புல், தாவரங்கள் உள்ளிட்டவை கருகி எளிதில் தீப்பற்ற கூடிய நிலையில் உள்ளது. ஆடலுார், சோலைக்காடு பகுதியில் உள்ள ஆத்துார் மலை அடிவார வனப்பகுதியில் சில தினங்களாக காட்டு தீ பற்றி எரிகிறது.
கன்னிவாடி வனத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டும் கட்டுப்படுத்த முடியாத சூழல் உள்ளது. வனத்தில் உள்ள அரிய மரவகை, வன விலங்குகள் தீக்கிரையாகி உள்ளன. தொடர்ந்து பற்றி எரியும் தீயால் சுற்றுச்சூழல் பாதித்துள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
