/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடைக்கானலில் தொடரும் காட்டுத்தீ
/
கொடைக்கானலில் தொடரும் காட்டுத்தீ
ADDED : மார் 17, 2024 07:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல் : கோடை வெயில் கொடைக்கானல் மலைப்பகுதியையும் விட்டு வைக்கவில்லை. வனப்பகுதியில் புல் உள்ளிட்ட இதர தாவரங்கள் கருகிய நிலையில் சில தினங்களாக பெரும்பள்ளம், வடகவுஞ்சி வனப்பகுதி, வருவாய், பட்டா நிலத்தில் காட்டுத் தீ பற்றி எரிந்தது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர், வனத்துறையினர் ஈடுபட்டனர்.
சூறைக்காற்றால் நேற்று 4வது நாளாக மச்சூர், தோகைவரை வனப்பகுதியிலும் தீ பரவியது. இதனால் மரங்கள் தீக்கிரையாகி வனவிலங்கு, சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டுள்ளது.

