/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடைக்கானல் வருவாய் நிலத்தில் காட்டுத் 'தீ'
/
கொடைக்கானல் வருவாய் நிலத்தில் காட்டுத் 'தீ'
ADDED : மார் 15, 2024 06:44 AM

கொடைக்கானல் : கொடைக்கானல் பெரும்பள்ளம் வனப்பகுதி அருகே உள்ள வருவாய் நிலத்தில் காட்டுத்தீ பரவி ஏராளமான நிலங்கள் தீக்கிரையான.
பெரும்பள்ளம் வனப்பகுதியான பொய்யா வழி மேடு,வடகரைபாறை, அருங்கானல், ஜெரோனியம் உள்ளிட்ட பகுதியில் ஏராளமான ஏக்கர் வன நிலங்கள் உள்ளன. இதனருகே பட்டா,வருவாய்த்துறை நிலம் ஏராளமாக உள்ளன. சில தினங்களுக்கு முன் இப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் வருவாய் நிலங்கள் தீக்கிரையாகியது. தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் மட்டுமே ஈடுபட்டனர். வருவாய்த்துறை, பட்டா நிலத்தினர் தீயை அணைக்க முன்வரவில்லை. தொடர்ந்து வனத்துறையினர் தீயை அணைத்த பின் வருவாய் துறையினர் லாவகமாக தாங்கள் தீயை அனணத்தது போன்ற மாயத்தோற்றத்தை அலுவலகத்திற்கு அனுப்பும் நிலை உள்ளது. இது போன்ற நிலையால் வனத்துறையினர் துயரமடைந்துள்ளனர். வனப்பகுதியில் கோடை வெயிலின் தாக்கத்தால் காட்டுத்தீ பரவும் நிலையில் இது போன்ற வருவாய் நிலங்களில் ஏற்படும் தீயை அணைப்பது மேலும் பணிச்சுமை அதிகரித்துள்ளது. வருவாய்துறையினர் தங்களது நிலத்தில் ஏற்படும் தீயை அணைக்க இனியாவது முன் வர வேண்டும்.

