ADDED : மார் 24, 2026 08:21 PM

அ நிறம் | அளவு
செம்பட்டி:மல்லையாபுரம் வனப் பகுதியில் பரவிய காட்டுத்தீயில் மரங்கள் எரிந்து சாம்பலானது.
கன்னிவாடி வனச்சரகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டிய மலையடிவார பகுதியில் சமீபத்திய வெயிலால் மரங்கள், செடி கொடிகள் காய்ந்து கிடந்தன. இப்பகுதியில் நேற்று மாலை காட்டுத்தீ உருவானது. பலத்த காற்று காரணமாக சுரக்காபட்டி கரடு பகுதி வரை தீ பரவியது. 10 ஏக்கருக்கு கூடுதலான பகுதியில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. கன்னிவாடி வனக்குழுவினர் தீ பரவலை தடுக்கும் பணிக்கு சென்றனர். இருப்பினும் இரவு வரை தீ பரவல் தொடர்ந்தது.
வனத்துறையினர் கூறுகையில், 'சம்பந்தப்பட்ட பகுதியில் பூவா ரக புல் மட்டுமே அடர்ந்துள்ளது. குறிப்பிடத்தக்க மரங்கள் ஏதும் இல்லை. வன உயிரின பாதிப்பிற்கும் வாய்ப்பு இல்லை ' என்றனர்.
--
