sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

குப்பையில்லா வனத்தை உருவாக்கும் வனத்துறையினர்

/

குப்பையில்லா வனத்தை உருவாக்கும் வனத்துறையினர்

குப்பையில்லா வனத்தை உருவாக்கும் வனத்துறையினர்

குப்பையில்லா வனத்தை உருவாக்கும் வனத்துறையினர்


ADDED : ஜூன் 30, 2025 03:46 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 03:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குப்பையில்லா வனத்தை உருவாக்கும் முயற்சியில் வனத்துறை ஊழியர்கள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளடக்கிய குழுவினர் செயல்பட்டு வருகின்றனர்.

கொடைக்கானல் வனப்பகுதி ஓங்கி உயர்ந்த மரங்கள், பசுமையை போர்த்திய மலைமுகடுகள், கொட்டும் அருவிகள்,இங்கு நடமாடும் வனவிலங்குகள் என தன்னகத்தே இயற்கை அழகை கொண்டுள்ளது. இதை ரசிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

கொடைக்கானலுக்கு வருகை தரும் ரோடுகள் அனைத்தும் வனப்பகுதியை ஒட்டியே உள்ளன.மேலும் வன சுற்றுலா தலங்களான மோயர் சதுக்கம்,குணா குகை, பைன் மரக்காடுகள், தூண்பாறை,மன்னவனூர் சூழல் சுற்றுலா மையப் பகுதிக்கு அதிகளவில் பயணிகள் வருகின்றனர். இயற்கை அழகை காண வருகை தரும் பயணிகள் சுற்றுச்சூழல் மீது கவனம் செலுத்தாது குப்பைகளை பொறுப்பற்ற வீசி செல்கின்றனர். இதனால் நாள்தோறும் வனப்பகுதி குப்பைகள் குவிந்து இயற்கை சுற்றுச்சூழல் பாதித்து வருகிறது.

இதை தவிர்க்கவும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொடைக்கானல் வனத்துறையினர் மாதந்தோறும் வனத்துறை ஊழியர்கள், தன்னார்வலர்கள்,கல்லூரி மாணவர்கள் உள்ளடக்கிய குழுவினர் ரோட்டோரம் உள்ள வனப்பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றி அவற்றை மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து இயற்கை வளத்தை காக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இத்தகைய நடவடிக்கை அனைத்து தரப்பினரிடத்திலும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் ஆரோக்யமான வனங்கள் உருவாக்கும் வனத்துறை முயற்சி சிறப்பு பெற்றுள்ளது.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையாவது: மாவட்ட வன அலுவலர் உத்தரவில் ரோட்டோர வனப்பகுதிகளில் குவியும் குப்பைகளை மாதம்தோறும் அகற்றி வனத்தை தூய்மையாக பராமரிக்கிறோம். இதையடுத்து கொடைக்கானலை சேர்ந்த தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள், வனத்துறையினர் இணைந்து குப்பைகளை சேகரித்து வனத்தை தூய்மையாக பராமரித்து வருகின்றோம்.

இவற்றிலிருந்து மக்கும், மக்காத குப்பைகளாக்க தரம் பிரித்து அருகில் உள்ள ஊராட்சிகளின் வருவாய்க்கு வித்திடும் வகையில் இவற்றை அளித்தும், குப்பைகளை சேகரித்து அதன் மூலம் வருவாய் ஈட்டும் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்திற்கும் அளித்து வருகிறோம் என்றனர்.

இம் முயற்சி இயற்கை சுற்றுச்சூழல் நிறைந்த வனத்தையும், அங்கு வாழும் வன உயிரினங்களையும் காக்கும் முயற்சிக்கு பலனாக அமைந்துள்ளது.






      Dinamalar
      Follow us