ADDED : ஏப் 24, 2025 06:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளிமந்தையம்: கள்ளிமந்தயத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் ஆதிதிராவிட மக்களுக்கு 11 ஏக்கரில்  200 குடியிருப்புகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா அமைச்சர் சக்கரபாணி ஆலோசனைப்படி நடந்தது.
பழநி ஆர்.டி.ஒ., சக்திவேல் தலைமை வகித்தார்.  தாசில்தார் பழனிச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபு பாண்டியன், முன்னாள் ஒன்றிய தலைவர்கள் சத்தியபுவனா, அய்யம்மாள், துணைத் தலைவர் தங்கம், தி.மு.க.,  மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி, ஒன்றிய செயலாளர் தங்கராஜ், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் கணேசன், குப்புசாமி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆனந்தராஜ், ஒன்றிய துணைச் செயலாளர் ராஜ்குமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தண்டபாணி கலந்து கொண்டனர்.

