தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வீடு கட்டுவதில் மோசடி;வழக்கு

வீடு கட்டுவதில் மோசடி;வழக்கு

வீடு கட்டுவதில் மோசடி;வழக்கு


ADDED : அக் 31, 2024 02:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 31, 2024 02:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாண்டிக்குடி: பண்ணைக்காட்டில் வீடு கட்டித் தருவதாக மோசடி செய்தவர்கள் மீது தாண்டிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

சென்னை தி.நகரை சேர்ந்தவர் பாலச்சந்திரன் . இவருக்கு ஊட்டியில் உள்ள நண்பர் கோபி மூலம் கொடைக்கானல் செண்பகனுாரை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் கண்ணன் அறிமுகமானார். இவர் மூலம் பண்ணைக்காட்டில் 27 ஏக்கர் விவசாய நிலம் வாங்கிய நிலையில் அதில் வீடு கட்டித் தருவதற்காக கண்ணனிடம் கட்டுமான பொருட்கள் , கூலிக்காக ரூ.53 லட்சத்து 69 ஆயிரத்து 902 கொடுத்துள்ளார்.

வீட்டை முறையாக கட்டுமானம் செய்யாமல் முறைகேடு செய்து உள்ளார். வீடு கட்டுமானம் குறித்த கணக்குகளை கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்துள்ளார். கண்ணன் அவரது மனைவி துர்கா, கொடைக்கானலை சேர்ந்த மைக்கேல் , ஜெயபால் ஆகியோர் மீது தாண்டிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us