ADDED : ஜூலை 14, 2025 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி காமராஜர் பிறந்தநாள் விழா குழு ஆண்டு விழாவை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாம் நடந்தது.
மருத்துவ முகாமினை டாக்டர் முருகேசபாண்டியன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். வத்தலக்குண்டு காசி மருத்துவமனை, திண்டுக்கல் சிட்டி, ஆர். கே குடல், ஆர்.ஆர் மருத்துவமனை சிகிச்சை அளித்தன. பட்டிவீரன்பட்டி எஸ்.ஆர்.கே மருத்துவமனை சார்பில் பல் மருத்துவம் நடந்தது. நிலக்கிழார் மாணிக்கவேல் முன்னிலையில் அன்னதானம் நடந்தது. காமராஜர் பிறந்த நாள் விழா குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஜெயபாலன், ஞானகுருசாமி முன்னிலை வகித்தனர். மாணிக்கம், சுபாஷ் சந்திரபோஸ் வரவேற்றனர்.