நடுவழியில் நின்ற சரக்கு ரயில்; பாலக்காடு ரயில் தாமதம்
நடுவழியில் நின்ற சரக்கு ரயில்; பாலக்காடு ரயில் தாமதம்
ADDED : ஏப் 01, 2026 11:29 PM
அ நிறம் | அளவு
பழநி:பழநி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த சரக்கு ரயில் பழுது காரணமாக நடுவழியில் நின்றதால் அரை மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதித்ததோடு பாலக்காடு ரயில் செல்வதிலும் தாமதம் ஏற்பட்டது.
பழநி ரயில்வே ஸ்டேஷனுக்கு பொள்ளாச்சியில் இருந்து நேற்று இரவு 7:00 மணிக்கு சரக்கு ரயில் வந்தது. பழநி ரயில்வே ஸ்டேஷன் அருகே புது தாராபுரம் ரோடு ரயில்வே கேட்டை கடக்கும் போது பழுதாகி நின்றது. இதனால் புது தாராபுரம் சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதே நேரத்தில் திருச்செந்துாரிலிருந்து இருந்து பாலக்காடு நோக்கி செல்லும் பழநி ரயில் ஸ்டேஷன் வந்து நின்றது. இரவு 7:30 மணிக்கு மேல் சரக்கு ரயில் இன்ஜின் சரி செய்ய நிலைமை சீரானது.
