/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோட்டின் கீழ் செல்லும் குழாயால் அடிக்கடி உடைப்பு; வீணாகும் காவிரி குடிநீர்
/
ரோட்டின் கீழ் செல்லும் குழாயால் அடிக்கடி உடைப்பு; வீணாகும் காவிரி குடிநீர்
ரோட்டின் கீழ் செல்லும் குழாயால் அடிக்கடி உடைப்பு; வீணாகும் காவிரி குடிநீர்
ரோட்டின் கீழ் செல்லும் குழாயால் அடிக்கடி உடைப்பு; வீணாகும் காவிரி குடிநீர்
ADDED : அக் 09, 2025 04:20 AM

குஜிலியம்பாறை : கோவிலுாார் கரூர் மெயின் ரோட்டில் கரிக்காலி பிரிவு அருகே காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்படுவதால் நீர் வெளியேறி வீணாகிறது. ஏற்கனவே சென்ற குடிநீர் குழாய் பாதையின் மீது மெயின் ரோட்டை அகலப்படுத்தியதே இதற்கு காரணம் என்பதால் குழாய் பாதையை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கரூர் காவிரி ஆற்றில் உள்ள கட்டளை பகுதியில் இருந்து வேடசந்துார், ஒட்டன்சத்திரம் நகர் பகுதிகளுக்கான காவிரி குடிநீர் ராட்சத குழாய்கள் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு நல்ல முறையில் காவிரி குடிநீர் விநியோகம் நடந்து வந்தது.தொட்டனம்பட்டியில் இருந்து எரியோடு, கோவிலுார், குஜிலியம்பாறை வழியாக கூடலுார் மாவட்ட எல்லை வரை இருந்த இரு வழி சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி ஓராண்டுக்கு முன்பு நடந்து முடிந்தன.
ரோடில் நீர் ஓடுவதால் பள்ளம் கோவிலுார் - பாளையம் மெயின் ரோட்டின் மேற்குப் பகுதியில் மெயின் ரோட்டை ஒட்டி காவிரி குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு இருந்த நிலையில் அதற்கும் மேல் பகுதியிலே இருவழி சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றி அகலப்படுத்தி விட்டனர். இதனால் காவிரி குடிநீர் குழாய் மெயின் ரோடு அடியில் செல்கிறது. கனரக லாரிகள் கூடுதலாக செல்லும் இந்த வழித்தடத்தில் காவிரி குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. சில நாட்களாக குஜிலியம்பாறை பாளையம் இடைப்பட்ட பகுதியில் கரிக்காலி பிரிவு அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு கூடுதலான நீர் கரிக்காலி ரோட்டில் செல்கிறது. ரோட்டோரம் பள்ளம் ஏற்பட்டதால் விபத்து நடந்து விடும் என்ற நோக்கில் தடுப்புகள் வைத்து கயிறைக் கட்டி பாதுகாத்து வருகின்றனர்.
பாதையை மாற்றலாம் எஸ்.ஆறுமுகம், சமூக ஆர்வலர், பாளையம்: தொட்டனம்பட்டியில் இருந்து கோவிலுார் வழியாக டி.கூடலுார் மாவட்ட எல்லை வரை இரு வழி சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றி அமைத்தனர். அதில் கோவிலுரிலிருந்து பாளையம் வரை காவிரி குடிநீர் குழாய் மேற்பகுதியிலே தார் ரோடை அமைத்து விட்டனர். இதனால் கனரக வாகனங்களின் போக்குவரத்து காரணமாக அடிக்கடி காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்படுகிறது. தற்போது கரிக்காலி பிரிவு அருகே உடைப்பு ஏற்பட்டு கூடுதலான நீர் வெளியேறுகிறது. இதற்கெல்லாம் ஒரே தீர்வு குடிநீர் குழாய் பாதையை சற்று துாரத்திற்கு தள்ளி மாற்றி அமைப்பது தான்.
எடை தாங்காமல் உடைப்பு பி.சீரங்கன், தி.மு.க., பேரூர் விவசாய அணி அமைப்பாளர், பாளையம்: இருவழி சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றி அமைத்ததில் இருந்தே காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது. கனரக வாகனங்களின் எடை தாங்காமல் தான் குடிநீர் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. குடிநீர் குழாய் மேற்பகுதியிலேயே ரோட்டை அமைத்து விட்டனர். குழாய் உடைகிறது என பேசி பயனில்லை. குழாய் பாதையை மாற்றுவது ஒன்றுதான் ஒரே வழி. மாவட்ட நிர்வாகம் விரிவான ஆய்வு நடத்தி குழாய் பாதையை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றார்.