/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அடிக்கடி நெரிசல்: சேதமடைந்த ரோடுகள் ஒட்டன்சத்திரம் 4வது வார்டு மக்கள் அவதி
/
அடிக்கடி நெரிசல்: சேதமடைந்த ரோடுகள் ஒட்டன்சத்திரம் 4வது வார்டு மக்கள் அவதி
அடிக்கடி நெரிசல்: சேதமடைந்த ரோடுகள் ஒட்டன்சத்திரம் 4வது வார்டு மக்கள் அவதி
அடிக்கடி நெரிசல்: சேதமடைந்த ரோடுகள் ஒட்டன்சத்திரம் 4வது வார்டு மக்கள் அவதி
ADDED : நவ 08, 2025 01:49 AM

ஒட்டன்சத்திரம்: தாராபுரம் ரோட்டில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல், சேதமடைந்த ரோடுகள் என ஒட்டன்சத்திரம் நகராட்சி நான்காவது வார்டில் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர்.
மார்க்கெட் பைபாஸ் ரோடு, தாராபுரம் ரோடு கிழக்கு மேற்கு, பழநி- திண்டுக்கல் ரோடு வடக்கு, வ.உ.சி.நகர் பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் தேவையான அளவிற்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் குடிநீர் பிரச்னை இல்லை.
போதுமான தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. வார்டுக்கென தனியாக பகுதி நேர ரேஷன் கடை பிரிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.தாராபுரம் ரோட்டில் ஆக்கிரமிப்பு காரணமாக அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சேதமடைந்த ரோடுகளில் வாகனங்களை இயக்க சிரமமாக உள்ளது.
தாராபுரம் ரோடும் மார்க்கெட் பைபாஸ் ரோடும் சந்திக்கும் பகுதியில் பல்வேறு கட்சிகள், நிறுவனங்களின் பிளக்ஸ் அடிக்கடி வைக்கப்படுவதால் பைபாஸ் ரோட்டில் இருந்து தாராபுரம் ரோட்டில் திரும்புவதில் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.
மார்க்கெட் பைபாஸ் ரோடு வடக்கு பகுதியில் சின்ன குளத்திற்கு செல்லும் கழிவுநீர் ஓடை துார்வாரப்படாமல் உள்ளது.
சின்னகுளம் நிரம்பி மறுகால் செல்லும் பகுதியில் உள்ள ஓடை துார்வாரப்படாமல் செடிகள் முளைத்துள்ளது.
தாராபுரம் ரோடு தும்மிச்சம்பட்டி பிரிவு பஸ் ஸ்டாப்பில் பயணிகளை ஏற்றி இறக்கி செல்லும் வரை பஸ்கள் நடுரோட்டிலே நிறுத்தப்படுகிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாக்கடையை மூடிய புற்களை அகற்றி முழுவதுமாக துார்வார வேண்டும். தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.
துார்வாரப்படாத ஓடை டி.குமார்தாஸ், பா.ஜ., நகர தலைவர், ஒட்டன் சத்திரம்: வார்டு வழியாக சின்ன குளம் செல்லும் ஓடையை துார்வார வேண்டும். தாராபுரம் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது.
மழைகாலத்தில் மழைநீர் தேங்காமல் இருக்கும் வகையில் வடிகால் வாய்க்கால் பெரிதாக அமைக்க வேண்டும். தாராபுரம் பழநி ரோடு சந்திப்பில் ரவுண்டானா, விரிவாக்கப் பகுதிகளில் தேவையான அடிப்படை வசதி,சின்னக்குளம் மறுகால் செல்லும் வாய்க்காலை துார்வாரி சுத்தம் செய்ய வேண்டும்.
குடிநீர் பிரச்னை இல்லை எஸ்.கோபி, மாவட்ட பொருளாளர்,நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அசோசியேஷன்: வார்டுக்குள் தேவையான அளவிற்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் குடிநீர் பிரச்னை இல்லை.
பல இடங்களில் புதிதாக தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிய ரேஷன் கடை அமைக்கப்பட்டுள்ளது. சாக்கடை தூர்வாரப்படுகிறது.
கோரிக்கைகள் நிறைவேற்றம் அழகேஸ்வரி, கவுன்சிலர் (தி.மு.க.,): அமைச்சரிடம் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து வார்டுக்கு என தனி ரேஷன் கடை உள்ளது. வ.உ.சி. நகர் பகுதியில் சேதம் அடைந்த தரைப்பாலம் சீரமைக்கப்பட்டு உள்ளது. ரோடுகள் விரைவில் சீரமைக்கப்படும்.
சாக்கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சின்னக்குளம் மறுகால் செல்லும் வாய்க்கால் துார் வாரப்படும். பைபாஸ் ரோடு பகுதியில் செல்லும் சாக்கடையை துார்வார கோரிக்கை வைத்துள்ளேன் என்றார்.

