sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 மனித நாகரிக துவக்கம் முதல் அறிவு வளர்ச்சி வரை அழகிய அசைவுகளின் மூலம் வெளிப்படுத்தி அசத்தல்

/

 மனித நாகரிக துவக்கம் முதல் அறிவு வளர்ச்சி வரை அழகிய அசைவுகளின் மூலம் வெளிப்படுத்தி அசத்தல்

 மனித நாகரிக துவக்கம் முதல் அறிவு வளர்ச்சி வரை அழகிய அசைவுகளின் மூலம் வெளிப்படுத்தி அசத்தல்

 மனித நாகரிக துவக்கம் முதல் அறிவு வளர்ச்சி வரை அழகிய அசைவுகளின் மூலம் வெளிப்படுத்தி அசத்தல்


ADDED : ஜன 04, 2026 05:49 AM

Google News

ADDED : ஜன 04, 2026 05:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி செயற்கை நுண்ணறிவை மனிதன் கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தி எதிர்கால தலைமுறைக்கான பொறுப்புணர்வுடன் தொழில்நுட்பத்தை அணுகவேண்டும் என்பது மைய செய்தியாக பழநி அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி ஆண்டு விழாவில் நடந்த சிறப்பின் பரிணாமம்'என்ற கருப்பொருளில் வலியுறுத்தப்பட்டது. விழாவின் துவக்கமாக இடம்பெற்ற பரதநாட்டியம், நாடகம் மனித நாகரிகத்தின் துவக்கம் முதல் அறிவின் வளர்ச்சி வரை கொண்ட பயணத்தை அழகிய அசைவுகளின் மூலம் வெளிப் படுத்தியது.

மன்னர்களின் ஆட்சி, ஆதிக்கம் எனும் காட்சிகள், மன்னர்களின் வளர்ச்சியும் சமூக ஒழுங்கும் எவ்வாறு உருவானது என்பதைக் கலைவடிவில் எடுத்துக்காட்டின. பாரம்பரிய வரலாறு நிகழ்ச்சி பாரம்பரிய மதிப்புகள் தலைமுறைகளை கடந்து எவ்வாறு இன்றைய உலகில் தொடர்கின்றன என்பதை உணர்த்தியது. விழாவில் கலந்துகொண்டவர்கள் பகிர்ந்தவை இதோ...

கலை வழியே கருத்து வெளிப்பாடு பட்டாபிராமன், செயலாளர் : கல்வி வாழ்வை உருவாக்கும் கலை என்ற உயரிய எண்ணத்தோடு மாணவர்களை வெறும் மதிப்பெண் பெறும் இயந்திரங்களாக இல்லாமல் மனிதநேயத்துடன் கூடிய முழுமையான மனிதர்களாக வடிவமைப்பதே தலையாய நோக்கம். நீட், ஜே.இ.இ., ஐ.ஐ.டி., போன்ற போட்டித் தேர்வு , மாநில தேசிய கலை, இலக்கிய, விளையாட்டு மேடைகளிலும் மாணவர்கள் வெற்றிகளை முத்திரை பதித்துள்ளனர். இன்றைய உலகம் இயந்திர உலகமாக மாறும் சூழ்நிலையில் அதை தனி மனிதன் வென்றுவிடலாம் என்பதை நடனங்கள் ,நாடகங்கள் மூலம் மாணவர்கள் சாதித்து காட்டினார்கள்.

மாற்றத்திற்கான பயணம் செல்வி நடராஜ், பள்ளி முதல்வர் : மாணவர்களை அன்புடன் அணுகி அவர்களின் தனித்திறமைகளை ஆராய வேண்டும். வெவ்வேறு இடங்களில் இருந்து வரும் மாணவர்களை அவர்களின் சூழ்நிலைக்கு ஏற்ப தயார் செய்ய வேண்டும். இந்த விழாவின் உச்சமாக நீட், ஜே.இ.இ., தேர்வுகளில் சிறப்பாக தேர்ச்சி பெற்று மருத்துவம், இன்ஜினியரிங் போன்ற உயர் கல்வித் துறைகளில் பயிலும் 30-க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ், ரூ.30 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப் பட்டது.

சாதிக்க முடிகிறது பிரவீன் கிருஷ்ணா, மாணவர்: ஒவ்வொரு முறையும் சிறப்பான மையக் கருத்துகளுடன் கூடிய ஆண்டு விழாவின் கலை நிகழ்ச்சிகள் எங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. என் கனவுகளை சுமையாக அல்ல சவாலாக மாற்றியவர்கள் எங்கள் ஆசிரியர்கள். திறமையான நிர்வாகம், தொலைநோக்கு சிந்தனை கொண்ட தலைமை, அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்கள் இந்த மூன்றின் சங்கமமே பள்ளி. எங்களுக்கு சிறப்பான முறையில் பயிற்சி அளித்து சரியான நேரங்களில் தேர்வுகளை நடத்தி வெற்றியடைய செய்ததால் தான் நீட் தேர்வில் சிறந்த மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்று என் போன்ற மாணவர்கள் சாதிக்க முடிகிறது.

சிறந்த எதிர்காலம் நர்மதா, பெற்றோர், உதவி மேலாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி: மாணவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை பள்ளியில் நடந்த நவீன யுகம் நிகழ்ச்சியின் மூலமாக அறிந்து கொள்ள முடிந்தது. செயற்கை நுண்ணறிவு யுகத்தில் எப்படி மனிதன் மனிதனாகவே இருந்து முன்னேற முடியும் என்பதை கலை, நாடகம், நடனம், உரை என அனைத்தும் எடுத்துரைத்தன. மாணவர்களின் உழைப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

ஈடு இணையற்ற சேவை சுப்பிரமணியம் ,திருவேங்கடம், பெற்றோர்: மனிதனும் இயந்திரமும் இணைந்த உலகம் என்ற நிகழ்ச்சியின் இறுதிக் காட்சிதொழில்நுட்பமும், மனித நேயமும் இணையும் போது தான் உண்மையான சிறப்பு உருவாகும் என்ற தெளிவான செய்தியை வெளிப்படுத்தியது. இது பட்டமளிப்பு விழா அல்ல ஒரு தலைமுறையின் வெற்றியை சொல்கிறது. இந்த சேவை தொடர வாழ்த்துகிறோம்.






      Dinamalar
      Follow us