தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 'கொடை' யில் உறை பனி; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 'கொடை' யில் உறை பனி; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 'கொடை' யில் உறை பனி; இயல்பு வாழ்க்கை பாதிப்பு


ADDED : டிச 22, 2025 09:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 22, 2025 09:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உறைபனி நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை சரி வர பெய்யாத நிலையில் கடந்த மாதம் முன் பனிக்காலம் துவங்கியது. சில நாட்களாக மதியத்திற்குப் பின் பனியின் தாக்கம் அதிகரித்து வெட, வெடக்கும் குளிர் நிலவுகிறது. பகலில் 24 டிகிரி செல்சியஸ், இரவில் குறைந்தபட்சமாக 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது.

ஏரி, பிரையன்ட் பூங்கா, ஜிம்கானா, அப்சர்வேட்டரி, கீழ்பூமி மன்னவனூர் பகுதிகளில் 2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

கொடைக்கானல் கோக்கர்ஸ்வாக் பகுதியிலிருந்து தெரியும் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட நகரங்களில் மூடுபனி நிலவுகிறது. எதிர் வரும் சில நாட்களில் கடும் உறை பனிப்பொழிவு நிலவும் என வானிலை மையத் தினர் தெரிவித்தனர்.

தற்போதைய பனியால் சரும வெடிப்புகள் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் குளிரை தாங்கும் ஆயத்த ஆடைகளின் விற்பனையும் அதிகரித்து உள்ளது.

மதியம் 3:00 மணிக்கு பின் துவங்கும் பனியின் தாக்கம் மறுநாள் காலை 11:00 மணி வரை நீடிக்கிறது. வழக்கத்திற்கு மாறான பனியின் தாக்கத்தால் பொதுமக்கள் செய்வதறியாது தவிக் கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us