/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நடைபாதையில் பழங்கள் பாதசாரிகள் அவதி
/
நடைபாதையில் பழங்கள் பாதசாரிகள் அவதி
ADDED : ஏப் 07, 2025 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் ரோட்டோரத்தில் உள்ள நடைபாதையில் அழுகிய பழங்களை அப்படியே போட்டுச் செல்வதால் பாதசாரிகள், பயணிகள் துர்நாற்றத்தால் சிரமப்படுகின்றனர்.
திண்டுக்கல் - திருச்சி ரோடு, அரசு மருத்துவமனை அருகே பாதசாரிகள் நடந்து செல்ல ஏதுவாக நடைபாதை உள்ளது. இதில் சிலர் தினசரி பழக்கடைகள் வைத்து நடத்தி வருகின்றனர். ஞாயிற்றுகிழமைகளில் கடைகள் அமைப்பதில்லை.
அழுகிய பழங்களை நடைபாதை ஓரங்களில் அப்படியே போட்டு விட்டு செல்கின்றனர். நடந்து செல்பவர்கள், பஸ்சிற்காக காத்திருப்பவர்கள் துர்நாற்றம் தாங்க முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.

