/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முதல்தர 10 பட்டியலில் இடம் பிடித்த காந்திகிராமம் துணைவேந்தர் பஞ்சநதம் தகவல்
/
முதல்தர 10 பட்டியலில் இடம் பிடித்த காந்திகிராமம் துணைவேந்தர் பஞ்சநதம் தகவல்
முதல்தர 10 பட்டியலில் இடம் பிடித்த காந்திகிராமம் துணைவேந்தர் பஞ்சநதம் தகவல்
முதல்தர 10 பட்டியலில் இடம் பிடித்த காந்திகிராமம் துணைவேந்தர் பஞ்சநதம் தகவல்
ADDED : ஆக 02, 2025 01:19 AM

சின்னாளபட்டி: ''நாட்டில் உள்ள முதல் தர 10 பல்கலைகளில் காந்திகிராமம் இடம் பெற்றுள்ளதாக '' துணைவேந்தர் பஞ்சநதம் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது: காந்திகிராம கல்வி நிறுவனம் 1976 ஜூலை 29ல் பல்கலையாக தரம் உயர்த்தப்பட்டது. இதன் ஐம்பதாம் ஆண்டு பொன்விழா தற்போது துவங்கி உள்ளது .மத்திய கல்வி அமைச்சகத்தின் ஒப்புதல் உடன் இந்த ஆண்டு முழுவதும் பொன் விழா கொண்டாட திட்டமிடப்பட்டு உள்ளது.
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேசிய தரம் மதிப்பீட்டு ஆய்வு (நாக்)குழு 2019 முதல் 2024 வரை பல்கலையின் பாடத்திட்டம், கற்பித்தல் முறை, ஆராய்ச்சி, விரிவாக்கம், நிர்வாகம், திறனாக்க செயல்பாடுகள் உள்ளிட்ட 7 வகை பரிமாணங்களை ஆய்வு செய்தது. இதில் 3.58(மொத்தம் 4ல்) என்ற உயர்ந்த பட்ச மதிப்பெண் பெற்றதன் மூலம் ஏ பிளஸ் தரநிலை வழங்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் நாட்டில் உள்ள முதல் தர 10 பல்கலைகளில் காந்திகிராமம் இடம் பெற்றுள்ளது. உயர் அந்தஸ்து பெற்றதன் மூலம் இங்கு படித்து வெளியேறும் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு, தொழில் முனைவோராகும் வழிகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் துவங்குதல், ஆராய்ச்சி பணிகள் போன்றவற்றிற்கு பல மடங்கு உதவியாக இருக்கும். இதற்காக உழைத்த பல்கலை வேந்தர் அண்ணாமலை, பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், முன்னாள், இன்னாள் மாணவர்கள் அனைவருக்கும் இதன் பெருமை சேரும். இந்தாண்டு இளங்கலை மக்கள் தொகையியல் புதிய பாடப்பிரிவு துவக்கப்பட்டு உள்ளது. செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் பாடங்களை துவக்கவும் திட்டமிட்டு உள்ளோம் ''என்றார்.