ADDED : செப் 16, 2026 03:01 AM

வத்தலக்குண்டு: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.
ஹிந்து முன்னணி சார்பில் வத்தலக்குண்டு மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் 60 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்தது. விஜர்சன ஊர்வலம் முன்னிட்டு நேற்று மாலை அனைத்து சிலைகளும் வத்தலக்குண்டு காளியம்மன் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டன.
காஞ்சிபுரம் கோட்டத்தலைவர் மணி, பா.ஜ., மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம், ஹிந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் முனியாண்டி, மாவட்ட பொதுச்செயலாளர் அண்ணாதுரை பங்கேற்க ஊர்வலம் துவங்கியது.
முக்கிய வீதிகள் வழியாக விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கண்ணாபட்டி வைகை ஆற்றுக்கு கொண்டு சென்று விஜர்சனம் செய்யப்பட்டன. எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலம் நடந்தது.
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில் ஒட்டன்சத்திரம் பகுதியில் 45 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் நடந்தது. ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் பகுதியில் நேற்று மாலை சிலைகள் ஊர்வலம் துவங்கியது. ஹிந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் ராஜா தலைமை வகித்தார். கோட்டச்செயலாளர் பாபா.கிருஷ்ணன் பேசினார். சமூக ஆர்வலர் முத்து, டாக்டர் துளசிராம் கொடியசைத்து துவக்கி வைத்தனர். மாவட்ட பொறுப்பாளர் முனியப்பன், நகர தலைவர் செந்தில்குமார், பா.ஜ., மாநில பொறுப்பாளர்கள் பழனிச்சாமி, செந்தில்அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். செக்போஸ்டில் துவங்கிய ஊர்வலம் பழநி ரோடு, தாராபுரம் ரோடு, ஏ.பி.பி., நகர் வழியாக விருப்பாச்சி தலையூற்று பகுதிக்கு சென்றது. அங்கு அனைத்து சிலைகளும் விஜர்சனம் செய்யப்பட்டன. டி.எஸ்.பி., கார்த்திகேயன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
