ADDED : ஆக 29, 2025 03:35 AM

சின்னாளபட்டி: சிவசேனா சார்பில் சின்னாளபட்டியில் விநாயகர் ஊர்வலம் நடந்தது. இதையொட்டி சுற்றுப்புற கிராமங்களில் அமைக்கப்பட்டிருந்த சிலைகள் சின்னாளபட்டிக்கு கொண்டுவரப்பட்டன. மாநில இளைஞரணி செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். தேவர் சிலை அருகில் இருந்து துவங்கி ஊர்வலம் முக்கிய தெருக்களில் வலம் வந்தது. சீவல்சரகு அருகே கண்மாயில் கரைக்கப்பட்டன.
- ஒட்டன்சத்திரம் : விநாயகர் சதுர்த்தி அன்று ஹிந்து முன்னணி சார்பில் ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், இடையகோட்டை பகுதிகளில் 35 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இவை அனைத்தும் ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு நேற்று மாலை ஊர்வலம் துவங்கியது.முன்னதாக நடந்த கூட்டத்திற்கு மாவட் துணைத் தலைவர் ராஜா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சரவணகுமார் முன்னிலை வகித்தார். நகர தலைவர் செந்தில்குமார், ஒன்றிய தலைவர்கள் ராஜா வரவேற்றார். பா.ஜ., மாநில இளைஞரணி தலைவர் சூர்யா, சமூக ஆர்வலர் முத்து துவக்கி வைத்தனர்.
ஒன்றிய செயலாளர் விஜயராஜ் நன்றி கூறினார். பா.ஜ., நிர்வாகிகள் பழனிச்சாமி, செந்தில் அண்ணாமலை, ருத்ரமூர்த்தி, வெங்கடேஷ், குமார்தாஸ், சூர்யா கலந்து கொண்டனர். ஒட்டன்சத்திரம் செக்போஸ்டில் துவங்கிய ஊர்வலம் பழநி ரோடு, தாராபுரம் ரோடு, ஏ.பி.பி. நகர் வழியாக விருப்பாச்சி தலையூற்று பகுதிக்கு சென்றது. அங்கு அனைத்து சிலைகளும் கரைக்கப்பட்டது.