/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முன்னாள் ஊராட்சி தலைவர், உறுப்பினரை தாக்கிய கும்பல்
/
முன்னாள் ஊராட்சி தலைவர், உறுப்பினரை தாக்கிய கும்பல்
முன்னாள் ஊராட்சி தலைவர், உறுப்பினரை தாக்கிய கும்பல்
முன்னாள் ஊராட்சி தலைவர், உறுப்பினரை தாக்கிய கும்பல்
ADDED : ஆக 31, 2025 04:35 AM
சாணார்பட்டி: - சாணார்பட்டி அருகே முன்னாள் ஊராட்சி தலைவர் , உறுப்பினரை தாக்கி, நகையை பறித்து சென்ற கும்பலை போலீசார் கைது செய்தனர்.
சோழகுகுளத்துபட்டியை சேர்ந்தவர் முருகேசன் 52. அஞ்சுகுழிப்பட்டி ஊராட்சி உறுப்பினராக இருந்தார் . இவர் நேற்று முன்தினம் அதே பகுதி டீ கடைக்கு டீ சாப்பிட சென்றார். அங்கு வந்த அஞ்சுகுழிப்பட்டியை சேர்ந்த ரஞ்சித், கலாநிதி,பால்பாண்டி,விஜி ஆகியோர் தகாத வார்த்தையால் பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். .அப்போது அஞ்சுகுழிப்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் ராஜா சீனிவாசன் தகராறை விளக்கி விட்டார். இவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.இதையடுத்து அஞ்சுகுழிப்பட்டியை சேர்ந்த கலாநிதி, மலையரசன்,பிரசாத், அஜித்குமார்,பால்பாண்டி,கார்த்திக் ஆகியோர் ராஜா சீனிவாசன் வீட்டிற்கு சென்று வீட்டிலிருந்து மின்சார பெட்டி ,குடிநீர் பைப், டூவீலரை சேதப்படுத்தினர். ராஜா சீனிவாசன் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை கலாநிதி, பிரசாத் ஆகியோர் அறுத்துக் கொண்டு தப்பினர். கலாநிதி 33,விஜி 43,மலையரசன் 30, கார்த்திகேயன் 41, ஆகிய 4 பேரை சாணார்பட்டி போலீசார் கைது செய்தனர். ரஞ்சித்,பால்பாண்டி, பிரசாத்,அஜித்குமாரை தேடி வருகின்றனர்.