ADDED : பிப் 09, 2024 05:01 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் கன்னிவாடி தெத்துப்பட்டியை சேர்ந்த டிரைவர் ராஜ்குமார்36. இவர் நேற்று தன் டூவீலரில் கஞ்சாவை மீனாட்சி நாயக்கன்பட்டி வழியாக கடத்தி வந்தார். இதையறிந்த திண்டுக்கல் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி,எஸ்.ஐ.,முத்துக்குமார் தலைமையிலான போலீசார் மீனாட்சி நாயக்கன்பட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். போலீசாரை கண்டதும் ராஜ்குமார்,வேகமாக செல்ல முயற்சித்தார். போலீசார் ராஜ்குமாரை,மடக்கி பிடித்து அவரது டூவீலரை சோதனை செய்தனர். அப்போது 10.640 கிலோ கஞ்சா சாக்குபையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
போலீசார் அதை பறிமுதல் செய்து ராஜ்குமாரை,கைது செய்தனர்.
