தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/குப்பை தரம் பிரித்தல் விழிப்புணர்வு

குப்பை தரம் பிரித்தல் விழிப்புணர்வு

குப்பை தரம் பிரித்தல் விழிப்புணர்வு


UPDATED : அக் 10, 2026 07:33 PM

ADDED : அக் 10, 2026 07:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 07:33 PM ADDED : அக் 10, 2026 07:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் குப்பையை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்குவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதன்படி திண்டுக்கல் வடக்கு மண்டலம் 8வது வார்டுக்கு உட்பட்ட ராமசாமிபுரத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

மாநகர் நல அலுவலர் முருகானந்தம் தலைமை வகித்தார். ஆர்.டி.ஓ., பழனிவேல், கமிஷனர் பிரேம்ஆனந்த் பங்கேற்று மக்கும், மக்காத, சுகாதாரம், சிறப்பு பராமரிப்பு கழிவுகள் என நான்கு விதமாக குப்பைகளை பிரித்தல், அவசியம், மறுசுழற்சி பற்றி விளக்கி பேசினர்.

தொடர்ந்து குப்பையை நான்கு விதமாக தரம் பிரித்து வழங்க 400 குடும்பங்களுக்கு குப்பைக் கூடைகள் வழங்கப்பட்டன. கவுன்சிலர் ஆனந்த், சுகாதார அலுவலர்கள் அறிவுச்செல்வம், தங்கவேல், சுகாதார இன்ஸ்பெக்டர் செல்வராணி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us