நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: கொடைக்கானல் தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் அட்மா திட்டத்தில் மன்னவனுார், கே.சி. பட்டியில் கலைஞர் திட்டத்தில் ரபி பருவத்திற்கான பயிற்சி நடந்தது.
காபி, மிளகு, சவ்சவ், பீன்ஸ் பயிர்களில் ஏற்படக்கூடிய நோய் , பூச்சி தாக்குதல், மண் மாதிரி குறித்து தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் குமார் எடுத்துரைத்தார். மன்னவனுாரில் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத் தலைவர் ரவீந்திரன் வெள்ளைப் பூண்டு, பீன்ஸ், உருளைக்கிழங்கு, கேரட் பயிர்களில் ஏற்படக்கூடிய நோய் மேலாண்மை, ஒருங்கிணைந்த உரமிடுதல் குறித்து விளக்கினார்.

