/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எரிவாயு மயானம் செயல்பாட்டிற்கு வந்தது
/
எரிவாயு மயானம் செயல்பாட்டிற்கு வந்தது
ADDED : மார் 07, 2026 06:55 AM
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு பேரூராட்சியில் அமைக்கப்பட்ட எரிவாயு மயானம் செயல்பாட்டுக்கு வந்தது.
பேரூராட்சியில் அரசு சார்பில் ரூ.1.49 கோடி மதிப்பில் எரிவாயு மயானம் அமைக்கப்பட்டு அதனை செயல்படுத்த ஒப்பந்ததாரர்கள் நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் திறக்கப்படாமல் இருந்தது. தற்போது கோவை ஈசா மையத்தினர் ஒப்பந்ததாரராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
எரிவாயு மின் மயானத்திற்கு இறந்தவர் உடலை கொண்டு செல்ல இயற்கை மரணம் அடைந்தால் மயானத்தில் 4ஏ படிவம் பெற்று டாக்டர் அல்லது அந்தந்த கிராம வி.ஏ.ஓ.,விடம் சான்று பெற வேண்டும். இறந்தவரின் ஆதார் நகல், சாட்சியாக ஒருவரது ஆதார் நகல் இரண்டு இணைத்து இறந்தவரின் பாஸ்போர்ட் போட்டோவை படிவத்தில் ஒட்டி சமர்ப்பிக்க வேண்டும். மயானத்தில் உடலை எரிப்பதற்கு கட்டணமாக ரூ.5500ஐ அங்குள்ள கியூ.ஆர்., கோடு மூலம் செலுத்த வேண்டும்.

