ADDED : ஆக 20, 2026 03:11 PM
வேடசந்துார், ஆக.21--
வேடசந்துார் வட்டார ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் சார்பில் 37வது ஆண்டு விழா, பொதுக்குழு கூட்டம் நடந்தது. சங்கத் தலைவர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத்தலைவர் தாமோதரன் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் தங்கவேல் வரவேற்றார். செயலாளர் மருதையப்பன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் வரதராஜன் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தார். தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க மாநிலத் தலைவர் மாணிக்கம் பங்கேற்று பேசினார்.
இக்கூட்டத்தில் தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். புதிய மருத்துவக் காப்பீட்டில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். மருத்துவப்படி ரூ.300 என்பதை மத்திய அரசு வழங்குவதை போல் ரூ.1000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். 70 வயதை கடந்தவர்களுக்கு ஓய்வூதியம் 10 சதவீதம் கூடுதலாக வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
