தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பொதுக்குழு கூட்டம்

பொதுக்குழு கூட்டம்

பொதுக்குழு கூட்டம்


ADDED : செப் 20, 2026 06:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2026 06:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: பழநி ரயில் உபயோகிப்பாளர் நலச்சங்கம் சார்பில், சங்கத்தின் பொதுக் குழு கூட்டம் நடந்தது.

தலைவர் நாகேஸ்வரன் தலைமை வகித்தார். கந்தவிலாஸ் நிர்வாகி பாஸ்கரன், தமிழ்நாடு அனைத்து வர்த்தக சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டத் தலைவர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பெரியாவுடையார் கோயில் செல்ல பழைய தாராபுரம் ரோட்டில் இருந்து கோயில் வரை புதிய ரோடு அமைக்க நிதி ஒதுக்கிய கோயில் நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தல், ரயில்வே ஸ்டேஷனில் இருந்து அடிவாரம் வரை செல்ல பேட்டரி கார் சேவையை கோயில் நிர்வாகம் துவக்கக்கோரியும், பாலக்காடு- மயிலாடுதுறை செல்லும் ரயிலை இயக்க மனு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் பழநியில் ஆட்டோ கட்டணம் அதிகரித்துள்ளது பயணிகளுக்கு சிரமம் ஏற்படுவதால் அதனை குறைக்க வலியுறுத்தப்பட்டது. திருநங்கைகள் சாலையோரம் நின்று பக்தர்களிடம் பணம் வசூலிப்பதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. செயலாளர் சீனிவாசன், பொருளாளர் பாலாஜி, இணைச் செயலாளர் பாலசுப்பிரமணியம் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us