/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள் ரெடி
/
பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள் ரெடி
ADDED : டிச 21, 2025 05:54 AM
பழநி: பழநி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பான முறையில் நடந்து வர ஒளிரும் குச்சிகளை கோயில் நிர்வாகம் தயாரித்து வருகிறது
பழநி முருகன் கோயிலுக்கு தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரை ஆக ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இரவு, மாலை நேரங்களில் சாலைகளில் வரும் வாகனங்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டிய குச்சிகள் எடுத்து வர பக்தர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இதனால் விபத்துகள் குறையும் நிலையில் பழநி கோயில் நிர்வாகம் சார்பில் நுாற்றுக்கணக்கான ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டிய குச்சிகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒளிரும் குச்சிகளை திண்டுக்கல் மாவட்ட எல்லையில் இரவு நேரத்தில் வரும் பக்தர்களுக்கு வழங்க போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளது.

