/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அய்யலுாரில் ரூ.5 கோடிக்கு ஆடு, கோழி விற்பனை தீபாவளிக்காக
/
அய்யலுாரில் ரூ.5 கோடிக்கு ஆடு, கோழி விற்பனை தீபாவளிக்காக
அய்யலுாரில் ரூ.5 கோடிக்கு ஆடு, கோழி விற்பனை தீபாவளிக்காக
அய்யலுாரில் ரூ.5 கோடிக்கு ஆடு, கோழி விற்பனை தீபாவளிக்காக
ADDED : அக் 17, 2025 01:48 AM

வடமதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் அய்யலுாரில் நடந்த வாரச்சந்தையில் ஆடு, கோழி, பந்தய சேவல்கள் ரூ.5 கோடிக்கு விற்பனை நடந்தது.
அய்யலுாரில் தீபாவளி பண்டிகைக்கு முந்தைய சந்தை என்பதால் நேற்று ஏராளமான ஆடு, கோழி, பந்தய சேவல்களை விவசாயிகள், வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இப்பகுதியில் லேசான மழை பெய்தபோதிலும் அதிகாலை 3:00 மணிக்கு துவங்கிய வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து காலை 9:00 மணிக்குள் முடிந்தது. சந்தை வளாகம் மட்டுமின்றி நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டிலும் விற்பனை நடந்ததால் நெருக்கடி ஏற்பட்டு போக்குவரத்து ஸ்தம்பித்தது. தீபாவளியையொட்டி ஆங்காங்கே மறைவிடங்களில் சேவல் சண்டை சூதாட்டம் அதிகம் நடக்கும் என்பதால் பந்தய சேவல்களுக்கு கிராக்கி இருந்தது. பலரும் சேவல்களை சண்டையிட செய்து திறனை சோதித்து வாங்கினர்.
வியாபாரிகள் கூறுகையில் 'தீபாவளி பண்டிகைக்கு முந்தைய சந்தை என்பதால் ஆடு, கோழி, பந்தய சேவல் வரத்தும், விலையும் அதிகமாக இருந்தது. ரூ.5 கோடிக்கு விற்பனை நடந்தது. உயிர் எடை அளவில் நாட்டு கோழி கிலோ ரூ.450, வெள்ளாடு ரூ.850, செம்மறி ஆடு கிலோ ரூ.800 என்ற அளவிலும், சண்டை சேவல் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையிலும் விற்றன ' என்றனர்.