ADDED : ஏப் 03, 2026 10:10 PM
அ நிறம் | அளவு
கன்னிவாடி:குட்டத்துப்பட்டி புனித அந்தோணியார் சர்ச்சில் புனித வெள்ளியையொட்டி சிறப்பு ஆராதனைகள் நடந்தது. பாதிரியார் சவுந்தர் தலைமை வகித்தார். இயேசு கிறிஸ்து பிறப்பு நாடகம், சிறப்பு திருப்பலி, கூட்டு பிரார்த்தனை நடந்தது.
ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர் .கு.ஆவரம்பட்டி புனித சவேரியார் சர்ச்சில் பாதிரியார் ஜான்நெப்போலியன் சிறப்பு திருப்பலி நடத்தினார். இதுபோல் ஏ.வெள்ளோடு, சிறுநாயக்கன்பட்டி, என்.பஞ்சம்பட்டி, ஆத்துார், வக்கம்பட்டி, கன்னிவாடி, காரமடை, கரிசல்பட்டி, அனுமந்தராயன்கோட்டை, எம்.அம்மாபட்டி சர்ச்களில் சிறப்பு திருப்பலி, கூட்டு பிரார்த்தனை நடந்தது.
