/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
/
இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
ADDED : டிச 18, 2025 06:30 AM
திண்டுக்கல்: விபத்தில் இறந்த வழக்கறிஞர் குடும்பத்துக்கு ரூ.38 லட்சம் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
திண்டுக்கல் நாகல்நகர் சாமியார்தோட்டம் பகுதியை சேர்ந்தவர்வழக்கறிஞர் கணேசன் .
2022 ஆக.4ல் வேலை விஷயமாக ஆத்துாருக்கு டூவீலரில் சென்றுவிட்டு திண்டுக்கல்லுக்கு திரும்பியபோது ஆதிலெட்சுமிபுரம் அருகே அரசு பஸ் மோதி இறந்தார்.
கணேசனின் மனைவி கல்யாணி இழப்பீடு கேட்டு திண்டுக்கல் சிறப்பு சப்-நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இழப்பீடாக ரூ.38 லட்சத்து 39 ஆயிரத்து 327 வட்டியுடன் தமிழக அரசு போக்குவரத்து கழகம் வழங்கவேண்டும் என உத்தரவிடப் பட்டது. இழப்பீடு வழங்கவில்லை. இதனால் நிறைவேற்றுதல் மனுவை கல்யாணி தாக்கல் செய்தார்.
விசாரித்த நீதிபதி சோமசுந்தரம் அரசு பஸ்சை ஜப்தி செய்யும்படி உத்தரவிட்டார்.
இதையடுத்து நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், இமாம் உல்ஹக், விஷ்ணுவர்த்தன் ஆகியோர் திண்டுக்கல் காமராஜர் பஸ்ஸ்டாண்டில் திருச்சி செல்லநின்ற அரசு பஸ்சை ஜப்தி செய்தனர்.

