தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பழநியில் அரசு பஸ் ஜப்தி

 பழநியில் அரசு பஸ் ஜப்தி

 பழநியில் அரசு பஸ் ஜப்தி


ADDED : ஜூலை 08, 2026 03:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2026 03:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: பழநியை சேர்ந்தவர் கனகராஜ் 54. இவர் 2023 ஜன.,ல் புதுதாராபுரம் ரோட்டில் டூவீலரில் சென்றபோது அரசு பஸ் மோதியதில் படுகாயம் அடைந்தார்.

கோயம்புத்துார் தனியார் மருத்துவமனையில் 2023., மே 11ல் இறந்தார்.

அவரது குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவர்களுக்கு ரூ.39 லட்சத்து 80 ஆயிரத்து 184 இழப்பீடு வழங்க அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டது.

இழப்பீடு தொகையை வழங்காததால் பழநி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் மனுதாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி மலர்விழி, வட்டியுடன் இழப்பீட்டு தொகையாக ரூ.46 லட்சத்து 56 ஆயிரத்து 346 வழங்க உத்தரவிட்டார். அதனை போக்குவரத்து கழகம் வழங்காததால் நீதிமன்றம் உத்தரவின்படி ஊழியர்கள் பழநி பஸ் நிலையத்தில் நிறுத்தி இருந்த அரசு பஸ்சை ஜப்தி செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us