UPDATED : ஜூலை 29, 2026 10:04 PM
ADDED : ஜூலை 29, 2026 09:54 PM
அ நிறம் | அளவு
பழநி:பழநி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கரன் 52. இவர் 2005ல் திண்டுக்கல் ரோடு ஓபளாபுரம் அருகே டூவீலரில் சென்றபோது அரசு பஸ் மோதியதில் இறந்தார். அவரது குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். விசாரித்த நீதிமன்றம் ரூ.4 லட்சத்து 28 ஆயிரம் இழப்பீடு வழங்க அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டது.
அதனை வழங்காத நிலையில் நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் மனுதாக்கல் செய்யப்பட்டது. விசாரித்த நீதிபதி ரேணுகாதேவி வட்டியுடன் இழப்பீட்டு தொகையாக ரூ.9 லட்சத்து 54 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார். அதனை போக்குவரத்து கழகம் வழங்காத நிலையில் நீதிபதி உத்தரவின்படி, பழநி பஸ் நிலையத்தில் நின்றிருந்த அரசு விரைவு பஸ்ஸை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
