UPDATED : நவ 05, 2026 11:55 PM
ADDED : நவ 04, 2026 08:01 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: அரசு அலுவலர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கூட்டுறவுத்துறை பதிவாளர்களின் ஊழியர் விரோத நடவடிக்கைகளை கண்டிப்பது, கூட்டுறவுத்துறை ஊழியர்கள் மீது மேற்கொண்டுள்ள எதேச்சதிகார போக்கை கைவிட வேண்டும், தனியார்மயத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். மாவட்டத் தலைவர் முபாராக் அலி, செயலாளர் சுகந்தி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
