/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அரசு பள்ளி மாணவர்கள் மோதல்: மயக்கம்
/
அரசு பள்ளி மாணவர்கள் மோதல்: மயக்கம்
ADDED : அக் 17, 2025 01:45 AM
வேடசந்தூர்: வேடசந்துார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் ஒரு மாணவர் மூச்சு திணறி மயங்கி விழுந்தார்.
வேடசந்துார் அரசு மேல்நிலைப் பள்ளியில் சாலை தெருவை சேர்ந்த முகமத் உமர் பாரூக் 14. ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.இவரும் சக மாணவர் கருக்காம்பட்டி வசந்தகுமாரும் புட்பால் பிளேயர்கள். சமீபத்தில் தான் திண்டுக்கல்லில் நடந்த விளையாட்டு போட்டிகளுக்கு சென்று வந்துள்ளனர். நேற்று மாலை பள்ளி முடிந்து நடந்து சென்றவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். கோபமடைந்த வசந்தகுமார் முகமது உமர் பரூக்கை தாக்கியதில் வாயில் நுரை தள்ளியபடி மயங்கினார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.