/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அரசு மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா
/
அரசு மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா
ADDED : மார் 08, 2026 06:02 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 2025- -2026ம் கல்வி ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா நடந்தது. முதல்வர் லட்சுமி தலைமை வகித்தார். மதுரை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் கலைச்செல்வி பங்கேற்று 767 இளங்கலை மாணவிகள், 193 முதுகலை மாணவிகள் என மொத்தம் 960 பேருக்கு பட்டங்கள் வழங்கினார். பல்கலை தரவரிசை பட்டியலில் முதல், 2ம் இடங்களைப் பெற்ற 24 மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. பேராசிரியர்கள் உமாமகஸ்வரி, சத்தியபாமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக கல்லுாரி ஆண்டு விழா, பேரவை நிறைவு விழா நடந்தது. முதல்வர் லட்சுமி தலைமை வகித்தார். விலங்கியல் துறைத்தலைவர் சத்தியபாமா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கரூர் மாவட்டம் குளித்தலை அரசுக் கல்லுாரி முதல்வர் சுஜாதா பங்கேற்று பேசினார். அதிக மதிப்பெண் எடுத்த, கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பேராசிரியர்கள் அப்பாஸ், தேவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்லுாரி பேரவை தலைவி மன்சுராபானு நன்றி தெரிவித்தார்.

