ADDED : ஜன 24, 2024 06:22 AM

சாணார்பட்டி : சாணார்பட்டி அருகே நொச்சிஓடைப்பட்டி அணுக்கிரகா கல்லுாரியில் 10 வது பட்டமளிப்பு விழா நடந்தது.
கல்லுாரி செயலர் ஜார்ஜ் பெர்னாட்ஷா தொடங்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் ஐசக் வரவேற்றார்.
மதுரை காமராஜர் பல்கலை பதிவாளர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன் மாணவர்களுக்கு பட்டமளிப்பு சான்றிதழ், மதுரை காமராஜர் பல்கலை அளவில்முதலாம் இடம் பிடித்தவர்களுக்கு கேடயம்,பதக்கம்வழங்கினார்.
கல்லூரி குழும தலைவர் லாரன்ஸ் பேசினார். 2021--22 கல்வி ஆண்டில் 376 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
259 இளங்கலை, 76 முதுகலை, 41 பட்டய படிப்பு மாணவர்களுக்கு மதுரை காமராஜர் பல்கலை பதிவாளர் ராமகிருஷ்ணன் பட்டம் வழங்கினார்.
திண்டுக்கல்: திண்டுக்கல ஆர்.வி.எஸ்.,கல்வியியல் கல்லுாரியில் 17வது பட்டமளிப்பு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக ஓய்வு ஓய்வு அதிகாரி பாரி பங்கேற்று பட்டதாரி ஆசிரியர்களுக்கு பட்டங்களை வழங்கினார். 2018--2020ல் முதல் மூன்று இடங்களை பிடித்த விஷ்ணு பிரியா, சுபாகனி, மணிமேகலை,2019 --2021 ல் முதல் மூன்று இடங்களை பிடித்த சுவேதா, ஹரிதா, தபு, 2020--2022ல் முதல் மூன்று இடங்களை பிடித்த காயத்ரி, கார்த்திகாதேவி, துர்கா தேவிக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டது.
ஆர்.வி.எஸ்., அறக்கட்டளையின் ஆலோசகர் பத்ரி, இயக்குனர் கிருஷ்ணகுமார், முதன்மை செயல் அலுவலர் வேணுகோபால், உமாபிரியன், சண்முகவேல், கல்லுாரி முதல்வர் செல்வின் பங்கேற்றனர்.

