/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அடியனுாத்தில் கிராம சபைக்கூட்டம்
/
அடியனுாத்தில் கிராம சபைக்கூட்டம்
ADDED : அக் 12, 2025 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : அடியனூத்து ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் கலெக்டர் சரவணன் பங்கேற்றார். அடிப்படை வசதிகள் குறித்த புகார் மனுக்களை மக்களிடமிருந்து பெற்ற அவர் சமத்துவபுரத்தில் தேவையான வசதிகள் செய்து தரக்கோரி அலுவலருக்கு உத்தரவிட்டார்.
பயிற்சி கலெக்டர் வினோதினி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் சீனிவாச பெருமாள், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நாகேந்திரன், சமூக நல அலுவலர் கரோலின், குழந்தை பாதுகாப்பு அலுவலர் சத்திய நாராயணன், கிழக்கு தாசில்தார் பாண்டியராஜன், பி.டி.ஓ.,மகுடபதி கலந்து கொண்டனர்.