ADDED : மார் 15, 2026 05:19 AM
அ நிறம் | அளவு
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கலை அறிவியல் கல்லுாரிக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பசுமை சாம்பியன் விருது வழங்கப் பட்டது.
இதற்கான சான்றிதழ், பரிசுத்தொகையை முதல்வர் தேன்மொழியிடம் கலெக்டர் சரவணன் வழங்கினார்.
உதவி கலெக்டர் வினோதினி, மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் ரமேஷ் பங்கேற்றனர்.
தாளாளர் வேம்பணன், துணை தாளாளர் கோகிலா, இயக்குனர் கவின்குமார், ஆராய்ச்சி திட்ட தலைவர் மேரி ஜோஸ்பின் இசபெல்லா பாராட்டு தெரிவித்தனர்.
