தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ காவலாளிகள் விழிப்புடன் இருப்பது அவசியம்

காவலாளிகள் விழிப்புடன் இருப்பது அவசியம்

காவலாளிகள் விழிப்புடன் இருப்பது அவசியம்


ADDED : ஆக 25, 2026 09:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2026 09:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல், ஆக.26

திண்டுக்கல் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்க இரவு ரோந்து, வாகன சோதனையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். கொள்ளை சம்பவங்களை தடுக்க தனியார் நிறுவன காவலாளிகளுக்கு ஆலோசனை கூட்டம் நடத்தும்படி எஸ்.பி., ஜெயக்குமார் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து திண்டுக்கல் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார், தெற்கில் இன்ஸ்பெக்டர்  இளஞ்செழியன் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. நகைக்கடைகள், தொழிற்சாலைகள், பள்ளிகள், கல்லுாரிகள்,  விடுதிகளின் காவலாளிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் இரவு நேரத்தில் காவலாளிகள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். சந்தேகப்படும் வகையில் யாராவது நடமாடினால் உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும். ஏதேனும் விபத்து நடந்தால் போலீசாருக்கு தெரிவித்து மீட்பு நடவடிக்கைக்கு உதவ வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

போலீஸ் அவசர உதவி, அதிகாரிகளின் அலைபேசி எண்கள் வழங்கப்பட்டன. இது போல் மாவட்டம்  முழுவதும் அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் தனியார் காவலாளிகளுக்கு ஆலோசனை கூட்டம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us