ADDED : மார் 30, 2026 07:53 PM
அ நிறம் | அளவு
வடமதுரை:பெரியகோட்டையை சேர்ந்தவர் செங்கல் சூளை உரிமையாளர் மருதமுத்து 42. இவருக்கு மேற்கு குழிப்பட்டி வினோத் என்பவருடன் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் விரோதம் இருந்தது.
பிப்.,26ல் வினோத், பெரியகோட்டை முத்துக்குமார், காப்பிளியபட்டி பகவதி, பண்ணைப்பட்டி கவியரசு, திண்டுக்கல் ரவுண்ட் ரோடு ஜெயக்குமார், தர்மராஜ், பொன்ராஜ் உடன் சேர்ந்து மருதமுத்துவை கொலை செய்தார். இவர்கள் கைதாகி சிறையில் உள்ள நிலையில் வினோத், முத்துக்குமார், பகவதி, கவியரசு, ஜெயக்குமார் ஆகிய ஐந்து பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க எஸ்.பி.,பிரதீபர் பரிந்துரையில் கலெக்டர் சரவணன் உத்தரவிடடுள்ளார்.
