/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொள்ளையர் இருவர் மீது குண்டாஸ்
/
கொள்ளையர் இருவர் மீது குண்டாஸ்
ADDED : நவ 13, 2025 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் நல்லாம்பட்டி ராசாத்தியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ் 25.கண்ணார்பட்டி, எஸ்.வி.ஆர்.
நகரை சேர்ந்தவர் யுவராஜ் 31. இருவரும் அக்.12ல் மினிபஸ்சை தடுத்து நிறுத்தி கத்தியை காட்டி மிரட்டினர்.கண்டக்டரிடம் பணப்பை, பயணிகளிடமிருந்து அலைபேசியை கொள்ளையடித்து சென்றனர். திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டனர். இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க எஸ்.பி.,பிரதீப் பரிந்துரைபடி கலெக்டர் சரவணன் உத்தரவிட்டார். இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

